விருதுநகர்

பட்டாசுக் கடைகளில் விபத்தினை தவிர்க்க மின் அணைப்பான் பொருத்த வலியுறுத்தல்

7th Sep 2019 02:26 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசுக் கடைகளிலும் தீ விபத்தை தவிர்க்கும் வகையில், மின் அணைப்பான் கருவியை பொருத்த வேண்டும் என, தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் என். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
       இது குறித்து அவர்வெள்ளிக்கிழை கூறியதாவது: தமிழகத்திலேயே அதிக அளவாக விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 800 பட்டாசுக் கடைகள் உள்ளன. இந்த பட்டாசுக் கடைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில், கடையின் முன்பாக தீயணைப்பான் கருவி, வாளியில் மணல் அல்லது தண்ணீர் வைத்திருக்க வேண்டும். கடைகளில் அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை இருப்பு வைக்கக் கூடாது. 
      மேலும், கடைகளில் கலர் மத்தாப்பு மற்றும் கேப் வெடிகளை தனியே வைக்க வேண்டும். அனைத்து கடைகளிலும் மின் அணைப்பான் பொருத்த வேண்டும். 
கடைகளில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டால், இந்த மின் அணைப்பான் கருவியானது தானாக மின் இணைப்பை துண்டித்துவிடும். இதனால் தீ பரவாமல் விபத்து தவிர்க்கப்படும்.
      எனவே, பட்டாசுக் கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளில் கண்டிப்பாக மின் அணைப்பான் கருவியை பொருத்தவேண்டும் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT