விருதுநகர்

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த இருவர் கைது

7th Sep 2019 02:28 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
       சிவகாசி அருகே மீனம்பட்டி கண்மாய் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் பாக்கியராஜ் தலைமையிலான போலீஸார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
       அப்போது, கண்மாய் கரைப் பகுதியில் சட்டவிரோதமாக இருவர் பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் மீனம்பட்டி செல்வம் (44), காட்டுராஜா (45) எனத் தெரியவந்தது. அதையடுத்து, போலீஸார் அவர்களிடமிருந்து பேன்சி ரக பட்டாசுகள் மற்றும்  மருந்துகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT