விருதுநகர்

சிதம்பரேஸ்வரர் கோயிலில் ஆவணித் திருவிழா திருக்கல்யாணம்

7th Sep 2019 02:24 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோயில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாணம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை முதல் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கோயில் கொடி மரத்துக்கு முன்பாக மூலவர் சிலைகளுக்கு எதிரே சிறப்பு யாகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற சிறப்புப் பூஜையில், ராஜபாளையம், நக்கனேரி, சிதம்பராபுரம், பட்டியூர், கொல்லங்கொண்டான், தளவாய்புரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT