விருதுநகர்

"வெம்பக்கோட்டை கண்மாய் நீர்வரத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும்'

4th Sep 2019 07:28 AM

ADVERTISEMENT

வெம்பக்கோட்டை கண்மாய் தூர்வாரும் பணிகளோடு, நீர்வரத்துக் கால்வாயையும் தூர்வார வேண்டும் என சாத்தூர் எம்.எல்.ஏ., எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் கேட்டுக் கொண்டார். 
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றிய கிராம பகுதிகளில் உள்ள கண்மாய் தூர்வாரும் பணிகளை சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குள்பட்ட விஜய கரிசல்குளத்தில் உள்ள பாண்டியன் கண்மாய், வெம்பக்கோட்டை பொதுப்பணித்துறை கண்மாய், எதிர்கோட்டை கோபாலசமுத்திரம் கண்மாய், நதிக்குடி சிறுகுளம் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். 
அப்போது அவர்,  கண்மாய்க்கு வரும் நீர்வரத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார். 
இதையடுத்து கல்லமநாயக்கன்பட்டியில் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு  உள்நோயாளிகளிடம்  குறைகளை கேட்டறிந்தார். மாநில ஜெ. பேரவை இணைச்செயலாளர் சேதுராமானுஜம்,  ஒன்றியச் செயலாளர்கள் ராமராஜ்பாண்டியன், எதிர்கோட்டை மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT