விருதுநகர்

விஸ்வநத்தத்தில் குடிநீர் விநியோகிக்கக் கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

4th Sep 2019 07:26 AM

ADVERTISEMENT

சிவகாசி வட்டம் விஸ்வநத்தம் ஊராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யக்கோரி, பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.
விஸ்வநத்தம் மேலூர் பகுதியில் 10 நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாம். இந்நிலையில் கடந்த 15 நாளாக அப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் குடி நீர் விநியோகம் செய்யக்கோரி அங்குள்ள ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
இதையடுத்து ஊராட்சிச் செயலர் செல்வம், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லை. மாற்று ஏற்பாடு செய்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT