விருதுநகர்

விருதுநகர் தனியார் பள்ளியில்  ரூ. 74.94 லட்சம் மோசடி: முன்னாள் நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்கு

4th Sep 2019 07:26 AM

ADVERTISEMENT

விருதுநகரில் தனியார் பள்ளியில்  பணி புரிந்த முன்னாள் நிர்வாகிகள் 2 பேர், போலி கணக்குகள் மூலம் ரூ.74,94,283 கையாடல் செய்ததாக சூலக்கரை போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
விருதுநகர் அருகே சூலக்கரையில் கேவிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 
 இப்பள்ளியின் நிர்வாக மேற்பார்வையாளராக விருதுநகர், கட்டையாபுரத்தை சேர்ந்த ஆனந்தவேல் (57) என்பவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 10.11.2017 முதல் 9.11-2018 வரை இப்பள்ளியின் செயலராக அருள்ராஜ், பொருளாளராக கோபால் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளனர். 
இந்த கால கட்டத்தில் நிர்வாகச் செலவினங்கள் குறித்த ஆவணங்களை ஆனந்தவேல் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதில்,  அருள்ராஜ், கோபால் ஆகியோர் 
ரூ. 74,94,283-ஐ  கையாடல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. 
இதுகுறித்து, ஆனந்தவேல் அளித்தப் புகாரின் பேரில் முன்னாள் நிர்வாகிகள் 2 பேர் மீது சூலக்கரை போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 இந்நிலையில், இந்து நாடார் அபிவிருத்தி மகிமை அலுவலகத்தில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில், பள்ளியில் பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகிகள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறுப்பினரான சுதர்சன் (70) என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார். 
இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் பள்ளி நிர்வாகியான அருள்ராஜின் தந்தை சத்தியராஜ் என்பவர் சுதர்சனிடம் தகராறில் ஈடுபட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.  இதுகுறித்து சுதர்சன் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் போலீஸார், சத்தியராஜ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT