விருதுநகர்

ராமலிங்காபுரத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு

4th Sep 2019 07:27 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம்  ராமலிங்காபுரத்தில் வாருகால் வசதியில்லாததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை வட்டம்  சிதம்பராபுரம் ஊராட்சியில் உள்ளது ராமலிங்காபுரம். இப்பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வாருகால் வசதி இல்லாததால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வீதியின் மையத்தில் வழிந்தோடி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இந்த தெருக்களின் வழியாக வாகனங்கள் செல்ல முடிவதில்லை. சிறுவர்களும் அடிக்கடி  வாருகால் பள்ளத்தில் தடுமாறி விழுகின்றனர்.
இவ்விதம் வீதிகளில் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. 
எனவே ராமலிங்காபுரத்தில் வாருகால் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT