விருதுநகர்

ராஜபாளையம் அருகே பெண் விவசாயி கொலை: கணவன், மனைவி கைது

4th Sep 2019 07:25 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பெண் விவசாயியை கொலை செய்த வழக்கில் கணவன், மனைவி இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு தேவதானத்தை சேர்ந்தவர் கணபதியம்மாள் (55). இவரது கணவர் வீரபாண்டி 3  ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
  இவருக்கு தனராஜ் (30), முனீஸ்வரன் (28) ஆகிய இரு மகன்களும் முத்துச்செல்வி (25) என்ற மகளும் உள்ளனர். 
கணபதியம்மாள் சீலாப்பேரி கண்மாய் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை பராமரித்து வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை அவர்  தனது விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.  அப்போது  அடையாளம் தெரியாத சிலர் இவரை  தாக்கி உள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற கணபதியம்மாளை, அந்த கும்பல் பின் தலையில் பலமாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த  கணபதியம்மாள்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதுறித்து தகவலறிந்து  அங்கு வந்த சேத்தூர் காவல்துறையினர்,  அவரது சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு. ராஜராஜன் தீவிர விசாரணை நடத்தினார். 
பின்பு காவல் துறையினர், கணபதியம்மாளின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் கணபதியம்மாளுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பனுக்கும் வயலில் தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் காளியப்பனும் அவரது மனைவி நாகம்மாளும் சேர்ந்து கணபதியம்மாளை மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது.  இதுதொடர்பாக சேத்தூர் போலீஸார்  வழக்குப்பதிவு செய்து  காளியப்பன் (45), நாகம்மாள் (40) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT