விருதுநகர்

ராஜபாளையம் அருகே கஞ்சா விற்ற மூதாட்டி கைது

4th Sep 2019 07:29 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கஞ்சா விற்ற மூதாட்டியை  போலீஸார் திங்கள்கிழமை  கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே அய்யனாபுரம் பகுதியில் கீழராஜகுலராமன் காவல் சார்பு ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதி வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜெயம்(64) என்பவரது வீட்டிலிருந்து வெளியே வந்த நபரை பிடிக்க போலீஸார் முயன்றபோது அவர் தப்பி ஓடி விட்டார். 
வீட்டின் பின்புறம் போலீஸார் சோதனையிட்டபோது பை ஒன்றில் 300 கிராம் மதிப்புள்ள 65 கஞ்சா பாக்கெட்டுகளை போலீஸார் கைப்பற்றினர். மேலும் கஞ்சா விற்பனை செய்ததாக ஜெயம் என்ற மூதாட்டியை  போலீஸார் கைது செய்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT