விருதுநகர்

"ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலப் பணி விரைவில் முடிக்கப்படும்'

4th Sep 2019 07:27 AM

ADVERTISEMENT

விருதுநகர்  மாவட்டம் ராஜபாளையத்தில் விரைவில் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்படும் என  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.
ராஜபாளையம் சத்திரப்பட்டி  சாலையில் நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையின்  திட்டப்பணிகள் செயலாளர் பிரபாகரன், கண்காணிப்பு பொறியாளர் பழனியப்பன், கோட்டப் பொறியாளர் லிங்கசாமி, உதவி கோட்டப் பொறியாளர் விஜயா மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். 
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: ரயில்வே மேம்பாலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடங்களை  ஒரு மாதத்திற்குள்  கையகப்படுத்தி பணிகளை விரைவாக முடிப்பதற்கும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில்  பாலம் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT