விருதுநகர்

பட்டாசு ஆலைத் தொழிலாளி  வீட்டில் ரூ.30 ஆயிரம் திருட்டு

4th Sep 2019 07:29 AM

ADVERTISEMENT

விருதுநகர் அருகே  பட்டாசு ஆலை தொழிலாளியின் வீடு புகுந்து ரூ. 30 ஆயிரம் மற்றும் 2 கிராம் தங்கத் தோடு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
 விருதுநகர் அருகேயுள்ள ஆவுடையாபுரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (47). பட்டாசு ஆலையில் காவலாளியாக பணி புரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டாராம். இவரது மகள்கள் பள்ளி, கல்லூரிக்கு சென்ற நிலையில் மனைவியும் வேலை காரணமாக வெளியில் சென்று விட்டாராம். 
அப்போது, கதவை பூட்டி சாவியை நிலையின் மேல் பகுதியில் வைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், பள்ளிக்கு சென்ற மகள் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கதவில் சாவி பொருத்திய நிலையில் இருந்துள்ளது.  
இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் கலைக்கப்பட்டு கீழே கிடந்துள்ளது. இதுகுறித்து அவர், தனது தாய், தந்தையருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் பணம் மற்றும் 2 கிராம் எடையுள்ள தங்கத் தோடு ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிந்தது. 
இது குறித்து சங்கரலிங்கம் அளித்தப் புகாரின் பேரில் வச்சகாரப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT