விருதுநகர்

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்

4th Sep 2019 07:25 AM

ADVERTISEMENT

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுகோரி  செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் சமையல் வேலை, வெளிநோயாளிகளுக்கு சீட்டு வழங்குதல், எலெக்ட்ரீசியன்,  காவல் உள்ளிட்ட பணிகளில் 28 ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் இவர்களது வருகைப்பதிவேட்டினை மட்டும் பார்வையிட்டு, ஆய்வு செய்யும்.  
ஆனால் இவர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்வது மாவட்ட நிர்வாகமாகும். இந்நிலையில் மற்ற மாவட்டங்களை விட சிவகாசி அரசு மருத்துவமனையில் ஊதியம் மிகக் குறைவாக வழங்கப்பட்டு வருவதாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து இங்கு பணிபுரியும் ஒப்பந்தத்தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை கடிதம் எழுதியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். எனவே ஊதிய உயர்வு கோரி , ஒப்பந்தத் தொழிலாளர்கள் அரசு மருத்துவமனை பிரதான வாசல் அருகே தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்தப்போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததால், நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.  
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT