விருதுநகர்

சிவகாசியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம்

4th Sep 2019 07:26 AM

ADVERTISEMENT

சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் பள்ளிப் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.
சிவகாசி பகுதியில் தாமிரவருணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணிகள், கழிவு நீர்வாய்க்கால் மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. கடந்த 4 மாத காலமாக இப்பணிகள் நடைபெற்று வருதால் இப்பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கும் மாணவ, மாணவிகள் சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே இச்சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என  நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
  பின்னர் சாலையை சீரமைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். தொடந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு, அவர்கள் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT