விருதுநகர்

சாத்தூரில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நாம் தமிழர் கட்சி கோரிக்கை

4th Sep 2019 07:28 AM

ADVERTISEMENT

சாத்தூர் பிரதான சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நாம் தமிழர் கட்சி சார்பில் நெடுஞ்சாலைத்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பிரதான சாலை கடந்த சில நான்கு மாதங்களுக்கு முன்னர் சீரமைக்கப்பட்டது. பின்னர் சாலை இருவழிப்பாதையாக பிரிக்கபட்டு, சாலையின் நடுவே தடுப்புசுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் முழுமை பெறாமல் கடந்த ஒரு மாதமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
இதனால் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே சென்று வருகின்றன. மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
எனவே இந்த சாலையில் தடுப்புசுவர் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி நகரத் தலைவர் முனியப்பன்  மற்றும் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT