விருதுநகர்

காவிரியை காப்போம்: விழிப்புணர்வுப் பிரசாரம்

4th Sep 2019 07:28 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை  ஈஷா யோக மையத்தினர் சார்பில் காவிரி நதியைக் காக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 ஈஷா யோகா தியான மையம் சார்பில் காவிரி கூக்குரல் எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  அதன்பேரில் அருப்புக்கோட்டை  பிரதானச்சாலையில் "காவிரி கூக்குரல்' எனும் விழிப்புணர்வு வாசகத்துடன் கூடிய பதாகைகளை ஏந்தி  ஈஷா யோக மைய தன்னார்வத் தொண்டர்கள் செவ்வாய்க்கிழமை மாலை விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது காவிரியைக் காப்போம். மரங்கள் நடுவோம் என அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 
இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை ஈஷா யோகா மையம் சார்பாக மணிவண்ணன், விநாயக மூர்த்தி, ஜெயந்தி மாலா, செளந்தர்ராஜன், நீலா, லலிதா ஆகிய தன்னார்வத் தொண்டர்கள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT