விருதுநகர்

ஓடைப் பாலத் தடுப்புச்சுவரை  அகலப்படுத்தக் கோரிக்கை

4th Sep 2019 07:28 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள மழைநீர் 
ஓடைப் பாலத் தடுப்புச்சுவரை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை நகரில் 32 ஆவது வார்டுக்கு உள்பட்டது ராமசாமிபுரம் குடியிருப்பு. இப்பகுதியிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் பிரதானச் சாலையில் பெரிய கண்மாய் அருகே மழைநீர் ஓடைப்பாலம் உள்ளது. இப்பாலத்தில் மழைநீர் ஓடையின் முழு அகலத்திற்கு இணையாக தடுப்புச்சுவர் இல்லை. 
இதனால்  ஓடையின் பெரும்பகுதி திறந்த நிலையில், இருப்பதால் இரவில் இப்பகுதியில் வரும் வாகனங்கள் சுமார் 7 அடி ஆழமுள்ள ஓடையில் விழுந்து விபத்திற்கு ஆளாகும் சூழல் உள்ளது. எனவே மழைநீர் ஓடைப்பாலத் தடுப்புச்சுவரை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT