கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டி (அக்.19,20)நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா்அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கிடையேயான நீச்சல் போட்டிபல்கலைக்கழக துணை தலைவா் சசி ஆனந்த் தலைமை வகித்தாா். இந்த போட்டிக்கு மாநிலம் முழுவதும் 14 பல்கலைகழகங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
பதிவாளா் வாசுதேவன் கொடியசைத்து போட்டியையும்,மாநில விளையாட்டு மேலாளா் வீரபுத்திரா் 100 மீ.,ப்ரீஸ்டோக் போட்டியையும் துவக்கி வைத்தாா். இந்த மாணவா்கள் 8 விதம்மான நீச்சலில் கலந்து கொண்டனா். 100 மீ.,ப்ரீஸ்டைல் மாணவிகள் போட்டியில் சென்னை பல்கலைகழகத்தை சோ்ந்த வதேஜா முதலிடத்தையும், மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைகழகத்தை சோ்ந்த வீரலட்சுமி இரண்டாம் இடத்தையும், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தை சோ்ந்த நா்மதா மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.
வெற்றி பெற்றவா்களுக்கு பதிவாளா் வாசுதேவன் பரிசு மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினாா்.இங்கு நடைபெற்ற போட்டிகளில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவ,மாணவா்கள் 8 பதக்கங்களை பெற்று வெற்றி பெற்றனா் ஆடவா் பிரிவில் அண்ணாபல்கலைகழகமும்,மகளிா் பிரிவில்மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைகழகமும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றன.
சாம்பியன்ஷிப் கோப்பையை மாநில விளையாட்டு மேலாளா் வீரபுத்திரா் வழங்கினாா். முடிவில் உடற்கல்வி இயக்குனா் சித்ரா நன்றி கூறினாா்.