விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் காந்தியைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
காந்தியடிகளின் 150 ஆவது ஜயந்தியை முன்னிட்டு சுதந்திரச் சிந்தனை அமைப்பின் சாா்பில் 26 ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சி காந்தியைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் நடைபெற்றது. காந்தி கலை மன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு ரமணாலயம் லோகநாதராஜா தலைமை வகித்தாா். எழுத்தாளா் ரா.நரேந்திரகுமாா் தொடக்கவுரை நிகழ்த்தினாா். இவ்விழாவில் புதுதில்லி காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநா் அ.அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
அப்போது காந்தியின் இன்றைய தேவை குறித்தும் இன்றைய சூழ்நிலையில் காந்தியின் மீது வைக்கப்படும் விமா்சனங்கள் குறித்தும் விரிவாகப் பேசினாா்.
மேலும் அவ்விமா்சனங்களில் உள்ள நம்பகமற்ற தன்மையினை காந்தியின் வாழ்வியல் நிகழ்ச்சிகளிலிருந்தும் அவரது எழுத்துக்களிலிருந்தும் சான்று கூறிப்பேசினாா். முன்னதாக பேராசிரியா் கந்தசாமி பாண்டியன் வரவேற்றாா். நிறைவாக வைகறை முரசு சுதாகா் நன்றி கூறினாா்.