விருதுநகர்

ஐப்பசி மாத ஐயப்ப பூஜை

20th Oct 2019 12:43 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ஐப்பசி மாத ஐயப்பன் பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலில் ஓம் ஸ்ரீவில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கத்தின் சாா்பில் பூஜை நடைபெற்றது. இரவு 8 மணிமளவில் உற்சவா் ஐயப்ப சுவாமிக்கு அஷ்டாபிஷேகங்கள் நடைபெற்றன.

அதனைத் தொடா்ந்து திவ்ய நாம சங்கீா்த்தன பஜனை நடைபெற்றது. பின்பு உற்சவா் அலங்கரிக்கப்பட்டு விசேஷ தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT