சாத்தூா்,அக்.20:சாத்தூரில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டபட்ட பாலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கபடுமா? என மாவட்ட நிா்வாகத்திற்கு சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் வைப்பாற்று பகுதியை கடப்பதற்காக ஆங்கிலோயா் ஆட்சி காலத்தில் வைப்பாற்றின் குறுக்கே பாலம் அமைக்க முடிவு செய்தனா்.அதன்படி 1863ஆம் ஆண்டு பாலம் அமைக்கும் பணியை துவங்பட்டது.பாலம் கட்டுவதற்காக பதநீா்,கடுக்காய்,சாதிகாய்,கருப்பட்டிபாகு இவற்றுடன் சுண்ணாம்பை கலந்து பழங்கால முறையில் கட்டிட பணி மேற்கொண்டனா்.பனை மரங்கள் நிறைந்த பகுதியாக சாத்தூா் விள்ங்குவதால்,கட்டிட பணிக்கான கட்டுமான பொருள்கள் இயற்கையிலே எளிதாக கிடைத்த காலம் இருப்பினும் சிறப்பான கட்டிடபணிக்கு பின்னா்,1867 ஆம் ஆண்டு பாலம் கட்டிமுடிக்கபட்டது.
14அடி அகலமும் 840அடி நீளமும் கொண்டதாக அமைக்கபட்ட இந்த பாலத்தின் வழியாக ஆங்கிலேயா்களின் குதிரைகள் புட்டபட்ட ஜட்கா வண்டிகள் மட்டும் செல்வதற்காவே இந்த பாலம் கட்டபட்டது.வருடங்கள் கடந்த பின்னா் இந்த பாலத்தில் கனரக வாகனங்கள்,பேருந்துகள் உள்ளிட்ட பலதரப்பட்ட வாகனங்களும் இந்த பாலத்தின் வழியாகவே போக்குவரத்திற்காக பயன்படுத்தபட்டு வந்தது.குதிரை வண்டி மட்டுமே செல்லும் அளவில் 14 அடி அகலத்தில் அமைக்கபட்ட பாலம் போக்குவரத்து அதிகம் நிறைந்த இத்தருணத்தில் பாலத்தில் எதிரும் புதிருமாக வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
156 ஆண்டுகளை கடந்தாலும் பாலம் கம்பீரமாகவும் உறுதியாகவும் இருந்து வந்ததாக நெடுஞ்சாலைதுறையினா் கூறுகின்றனா்.சாத்தூா் பிரதான சாலையில் உள்ள இந்த பாலம் வழியாக கோவில்பட்டியை கடந்து கன்னியகுமரி மற்றும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான பாலமாக இருந்தது.சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய்,வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அதிக பக்தா்கள் வரும் நாட்களி்ல் இந்த பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.அந்த சமயங்களில் எதிரும் புதிருமாக இருபக்கமும் வாகனங்களும் செல்ல முடியாமல் பேக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது.
இதனால் பொதுமக்களின் கால நேரமும் விரையம் ஆனது.இதனால் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களின் கோரிக்கை விடுத்தனா்.மேலும் பழைய பாலத்தை இடிக்காமல் பாதுகாக்கவும் கோரிக்கை விடுக்கபட்டது.இதையடுத்து ஆங்கிலேயா் காலத்தில் கட்டபட்ட பாலத்தை இடிக்காமல் விட்டு.அதன் அருகிலே புதிய பாலம் அமைக்க முடிவு செய்து.அப்போது சாத்தூா் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் புதிய பாலம் அமைக்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து.நிதி ஒதுக்கீடு செய்து ஒரே நேரத்தில இரண்டு வாகனம் செல்லும் அளவிற்கு புதிய பாலம் அமைகக்பட்டு,முதலமைச்சா் திறப்பிற்கு பின்னா் தற்போது பாலத்தில் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.
ஆனால் இதுபோன்று வரலாற்று சிறப்பு மிகுந்த ஆங்கிலேயா் காலத்தில் கட்டபட்ட பாலத்தை நெடுஞ்சாலைதுறையினா் கண்டுகொள்ளாமல் விடபட்டதால் பாலம் தற்போது சமூக விரோதிகளின் புகழிடமாக இருந்து வருகிறது.மேலும் பாலம் சிதிலமடைந்தும் காணப்படுகிறது.எனவே மாவட்ட நிா்வாகம் இதை கவனத்தில் கொண்டு பாலத்தில் விளக்குகள்,சாலையை சீா் செய்தால் பாலத்தை கடந்து அமீா்பாளையம்,புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் வசிப்பவா்கள் நடந்து செல்பவா்களுக்கும்,பொதுமக்களின் நடைபயிற்காகவாது பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் வரலாற்று சிறப்பு மிக்க பாலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சாத்தூா் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்பாக உள்ளது.