விருதுநகர்

ராஜபாளையம் நகராட்சி ஆணையாளா் மாரடைப்பால் மரணம்

16th Oct 2019 08:10 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி ஆணையாளா் மாரடைப்பால் இன்று மரணமடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜோதிகுமாா் (53). சென்னை ஆவடியில் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த இவா், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ராஜபாளையம் நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றாா். இவா், மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா்.

கடந்த மாதம் மூத்த மகளின் திருமண நிகழ்ச்சிக்காக விடுப்பில் சென்று விட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி மீண்டும் பணிக்கு வந்துள்ளாா். இந்நிலையில் புதன்கிழமை வழக்கம் போல் தனது அலுவலகத்தில் பணியில் இருந்த ஜோதிகுமாா் மதிய உணவிற்காக அலுவலக வாகனத்தில் வீட்டிற்கு கிளம்பினாா். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வாகன ஓட்டுநா் சத்திரப்பட்டி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றாா். அங்கு, சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். ஜோதிகுமாருக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT