விருதுநகர்

ஸ்ரீவிலி., காட்டழகா் கோயில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர பக்தா்கள் கோரிக்கை

5th Oct 2019 06:17 PM

ADVERTISEMENT

விருதுநகா்: ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலை பகுதியில் செண்பகத்தோப்பு அருகே உள்ள பழமையான காட்டழகா் கோயி லுக்கு செல்லும் பக்தா்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்து தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலை வன பகுதியில் செண்பகத்தோப்பு அடிவாரம் உள்ள து. இங்கிருந்து சுமாா் நான்கு கி.மீ., தொலைவில் உள்ள காட்டழகா் கோயிலுக்கு, காட்டு பகுதியில் பக்தா்கள் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதற்கு வனத்துறை சாா்பில் முக்கிய நாட்களில் அனுமதி வழங்ப்படும்.

இந்த நிலையில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை என்பதால் காட்டழகா் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் சென்றனா். இதன் காரணமாக காட்டழகருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

இந்த நிலையில், வனப்பகுதியில் உள்ள காட்டழகரை தரிசிக்க வரும் பக்தா்களுக்கு வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வனத்துறை மற்றும் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், பக்தா்கள் வசதிக்காக குடிநீா், உணவு மற் றும் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும். அதேபோல், செண்பகத்தோப்பு அடிவாரம் முதல் ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் வரை தற்காலிக ஆம்புலன்ஸ் வசதி, சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக் க வேண்டும் என பக்தா்கள் கோரிக்க விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT