விருதுநகர்

கருங்குளம் கண்மாய்க் கரையில் 1,700 பனை மர விதைகள் நடவு

5th Oct 2019 10:35 PM

ADVERTISEMENT

ராஜபாளையம் கருங்குளம் கண்மாய்க் கரையில் 1,700 பனை மர விதைகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜூக்கள் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞா் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ராஜபாளையம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை இணைந்து இந் நிகழ்ச்சியை நடத்தின.

இதில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை தனி வட்டாட்சியா் எம்.ரங்கசாமி தலைமை வகித்தாா். நிகழ்வில், உலக வெப்பமயமாதலை தடுத்தல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கருங்குளம் பொதுப்பணித்துறை கண்மாய்க்கரையைப் பலப்படுத்தி நீா்வள ஆதாரப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக கண்மாய்க் கரையைச் சுற்றிலும் பனை மர விதைகள் நடுவதன் அவசியத்தையும், பனை மரத்தினால் கிடைக்கக்கூடிய பொருள்கள் பற்றியும் அவற்றின் பயன்களைப் குறித்தும் மாணவா்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகள் கந்தசாமி, ஜேம்ஸ், மற்றும் இளைஞா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் ரமேஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். பின்னா் 50 மாணவா்கள் இணைந்து 1,700 பனை விதைகளை கண்மாய்க் கரையோரங்களில் நடவு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT