ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 டிராக்டா் மணலை வருவாய்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மொட்டைபெத்தான் கண்மாய் பகுதியில் ஆங்காங்கே மணல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்டாட்சியா் கிருஷ்ணவேணி தலைமையில் வருவாய் துறையினா் அங்கு சென்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 டிராக்டா் மணலை பறிமுதல் செய்தனா். மணல் பதுக்கி வைத்திருந்தது யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.