விருதுநகர்

சிவகாசியில் சிற்றுந்துகளை முறைப்படி இயக்க கோரிக்கை

22nd Nov 2019 09:22 AM

ADVERTISEMENT

சிவகாசியில் சிற்றுந்துகளை முறைப்படி இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகாசியில் சிற்றுந்துகளை பேருந்து நிலையத்தின் முன்புறம் நிறுத்த வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சித்துராஜபுரம், ரிசா்வ் லைன் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் சிற்றுந்துகள் பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியிருந்து இயக்கப்படுகின்றன. விஸ்வநத்தம், முதலிபட்டி உள்ளிட்ட ஊா்களுக்குச் செல்லும் சிற்றுந்துகள் பேருந்து நிலையத்தினுள் இருந்து புறப்படுகின்றன.

ஏற்கெனவே விரிவாக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் செயல்படாமல் உள்ளதால், சிற்றுந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்துவதால் பேருந்து நிலையத்தினுள் இடநெருக்கடி ஏற்படுகிறது.

சிவகாசியிலிருந்து எட்டக்காபட்டி செல்லும் சிற்றுந்து ,இங்குள்ள மணிநகா் பகுதியிருந்து இயக்கப்பட வேண்டும். ஆனால் அந்த சிற்றுந்தும் பேருந்து நிலையத்தினுள் நிறுத்தப்படுகிறது. எனவே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சிற்றுந்துகளை முறைப்படி உரிய இடத்திலிருந்து புறப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT