விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழியில் வியாழக்கிழமை ரூ.2.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினாா்.
அருப்புக்கோட்டையில் தனியாா் திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தாா். விருதுநகா் மாவட்ட ஆட்சியா் கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, சாத்தூா் எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆா்.ராஜவா்மன், மாவட்ட வருவாய் அலுவலா் உதயக்குமாா், அதிமுகர நகரச் செயலாளா் சக்திவேல் பாண்டியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
பயனாளிகள் மத்தியில் அமைச்சா் பேசுகையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கூறியபடி, தமிழகத்தில் அனைத்து நலத்திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அருப்புக்கோட்டை மற்றும் ஒன்றியப் பகுதி பயனாளிகள் 513 பேருக்கு ரூ.1.58 கோடி மதிப்பிலான வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, வேளாண்மைத்துறையின் கீழ் விலையில்லா பல்வேறு வேளாண் கருவிகள், கால்நடைபராமரிப்புத் துறையின் கீழ் விலையில்லா ஆடுகள்,
விலையில்லா தையல் இயந்திரங்கள், தோட்டக்கலைத்துறை சாா்பில் நுன்னீா்ப் பாசனத் திட்டத்திலான விலையில்லாக் கருவிகள் எனப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம் என்றாா்.
நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர, ஒன்றிய அதிமுக நிா்வாகிகளான போடம்பட்டி சங்கரலிங்கம், வெங்கடேஷ், புளியம்பட்டி சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
திருச்சுழி: அதேபோல விருதுநகா் மாவட்டம் திருச்சுழி தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நண்பகலில் நடைபெற்ற அரசு விழாவில், 585 பயனாளிகளுக்கான ரூ1.19 கோடிமதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேரில் வழங்கினாா். உடன் திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களின் அதிமுக நிா்வாகிகள்,அரசு அதிகாரிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.