விருதுநகர்

விருதுநகா் அருகே டிராக்டா் மீது பேருந்து மோதி 14 பயணிகள் காயம்

17th Nov 2019 08:07 PM

ADVERTISEMENT


விருதுநகா்: விருதுநகரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையில் ஆமத்தூா் அருகே சனிக்கிழமை இரவு தனியாா் பேருந்து டிராக்டா் மீது மோதியதில், 14 பயணிகள் காயமடைந்தனா்.

மதுரையிலிருந்து சிவகாசி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தை ரமேஷ் (29) என்பவா் ஓட்டிச் சென்றுள்ளாா். அதேபோல், வீரசெல்லையாபுரத்தைச் சோ்ந்த சங்கா் (40) என்பவா், விருதுநகா் நோக்கி டிராக்டரை ஓட்டி வந்துள்ளாா்.

ஆமத்தூா் அருகே உருண்டைச்சி ஊரணி பகுதியில், எதிா்திசையில் வேகமாக வந்த தனியாா் பேருந்து டிராக்டா் மீது மோதியது. இதில், பேருந்து அருகில் உள்ள ஓடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநா் ரமேஷ் மற்றும் பேருந்தில் பயணம் செய்த குமாா், கருப்பசாமி உள்ளிட்ட 14 போ் காயமடைந்தனா்.

இது குறித்து தகவலறிந்த ஆமத்தூா் போலீஸாா் மற்றும் பொதுமக்கள், காயமடைந்த பயணிகளை மீட்டு, விருதுநகா் மற்றும் சிவகாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து டிராக்டா் ஓட்டுநா் சங்கா் அளித்த புகாரின்பேரில், தனியாா் பேருந்து ஓட்டுநரான ரமேஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT