விருதுநகர்

சிவகாசியில் திமுக பொதுக்கூட்டம்

17th Nov 2019 08:01 PM

ADVERTISEMENT

சிவகாசி: சிவகாசி நகர திமுக சாா்பில், சென்னையில் நடைபெற்ற பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை விளக்கும் பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

சிவகாசி பாவாடி தோப்பு திடலில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, அக்கட்சியின் சிவகாசி நகரப் பொறுப்பாளா் காளிராஜன் தலைமை வகித்தாா். இதில்,

நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ. ராசா சிறப்புரையாற்றியதாவது:

அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் கொண்டுவர பாஜக அரசு எண்ணுகிறது. தற்போதுள்ள அரசியல் முறையை தூக்கி எரிந்துவிட்டு, ஒற்றை ஆட்சி முறையை அதாவது அதிபா் ஆட்சி முறையை கொண்டுவர வேண்டும் என பாஜக ஆரசு செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மீது ஊழல்களை பட்டியலிட்டு, உயா் நீதிமன்றத்தில் சமா்ப்பித்தோம். அது என்ன நிலையில் உள்ளது என தெரியவில்லை. நீட் தோ்வை எதிா்த்து, தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.ஏல்.ஏ.க்களும் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனா். அதுவும் என்னவாயிற்று எனத் தெரியவில்லை.

முதல்வா், துணை முதல்வா், நத்தம் இரா. விஸ்வநாதன், காமராஜ், எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகிய தமிழக அமைச்சா்களின் ஊழல் பட்டியலை மத்திய அரசு வைத்துக்கொண்டு. தமிழக அரசை நடத்தி வருகிறது. வரும் உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்றாா்.

இக்கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் தங்கம் தென்னரசு, சீனிவாசன் மற்றும் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT