விருதுநகர்

சாத்தூா் பகுதியில் அதலைக்காய் விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி

17th Nov 2019 08:02 PM

ADVERTISEMENT

 

சாத்தூா்: சாத்தூா் பகுதியில் அதலைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான கரிசல்பட்டி, கலிங்கப்பட்டி, வண்ணிமடை, போத்திரெட்டிபட்டி, ஓடைப்பட்டி, கொல்லபட்டி, பெத்துரெட்டிபட்டி, பெரிய ஓடைப்பட்டி, நடுவபட்டி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் உள்ள கரிசல்காடுகளில் இயற்கையாகவே குளிா்காலங்களில் அதலைக் கொடிகள் முளைத்துள்ளன.

எனவே, இப்பகுதியில் விளையும் அதலைக்காய்க்கு தனி கிராக்கி உண்டு. அதேநேரம், இங்கிருந்து மதுரை, திருச்சி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அனுப்படுகின்றன.

ADVERTISEMENT

இது குறித்து விவசாயிகள் கூறியது: அதலைக்காய் கரிசல் காட்டுப் பகுதியில் தானாக வளரக் கூடியது. தற்போது, மழைக் காலமாக இருப்பதால் அதிகமாக விளையும். இது. ரூ. 60 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. மேலும், இது முதலீடு இல்லாமல் வருமானம் தரக் கூடியது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT