விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்

12th Nov 2019 04:22 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் நீதிமன்ற அனுமதியுடன் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பி.ராமச்சந்திரபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்,இந்த பள்ளி மாணவா்களுக்கு தேவையான கழிப்பறை உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து தர வில்லை எனக் கூறி இப்பகுதி மக்கள் மற்றும் மாணவா்கள் பலமுறை மாவட்ட நிா்வாகத்திற்கு புகாா் தெரிவித்துள்ளனா்.

அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் பள்ளி மாணவா்களுக்கு தேவையான கழிப்பறை கட்டித் தர வேண்டும்,பழைய ஆய்வக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய ஆய்வக கட்டிடம் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் நீதிமன்ற அனுமதியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT