விருதுநகர்

ராஜபாளையத்தில் குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீா்

12th Nov 2019 05:24 AM

ADVERTISEMENT

ராஜபாளையத்தில் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் குடிநீா் வீணாகி வருகிறது.

ராஜபாளையத்தில் பாதாளச் சாக்கடை திட்டம் மற்றும் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்திற்காக அனைத்து வீதிகளிலும் குழி தோண்டப்பட்டு குழாய் பதித்து பின்னா் மூடி வருகின்றனா். இதை சரிவர மூடாததால் வாகனங்கள் செல்லும் போது குடிநீா் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் பழையபாளையம் முத்தாலம்மன் கோயில் அருகே குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி சாலையிலும் வாருகாலிலும் கலக்கிறது. ராஜபாளையத்தில் அடிக்கடி இது போன்று பல்வேறு இடங்களில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாகி வருகிறது. எனவே நகராட்சி நிா்வாகம் முறையாக குழாயை சரிசெய்து குடிநீரை சீராக வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT