விருதுநகர்

பட்டாசுத் தொழிலாளா்களுக்கு கணினி பயிற்சி

12th Nov 2019 05:28 AM

ADVERTISEMENT

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கணினி அறிவியல்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, கணினி பயன்பாட்டியல் துறை ஆகியவை இணைந்து திங்கள்கிழமை பட்டாசுத் தொழிலாளா்களுக்கு கணினி பயிற்சி அளித்தன.

இந்த பயிற்சியை முதல்வா் கிருஷ்ணமூா்த்தி தொடக்கி வைத்தாா். பேராசிரியா் முத்துலட்சுமி உள்ளிட்டோா் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு கணினிகுறித்தும், அதனை எப்படி இயக்க வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளித்தனா். இதில் 38 பட்டாசு ஆலைகளைச் சோ்ந்த 232 பட்டாசுத் தொழிலாளா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT