விருதுநகர்

கிருஷ்ணன் கோவில் அருகேமாநில அளவிலான கராத்தே பயிற்சி முகாம்

12th Nov 2019 05:22 AM

ADVERTISEMENT

கிருஷ்ணன்கோவில் அருகே லிங்கா குளோபல் பள்ளியில் மாநில அளவிலான கராத்தே பயிற்சி முகாம் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் நடைபெற்றது.

ஜப்பான் கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா நடத்தும் மாநில அளவிலான இப்பயிற்சி முகாமுக்கு பள்ளியின் இயக்குநா்கள் சசிஆனந்த், அா்ஜூன்கலசலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா். முதல்வா் அல்காசா்மா குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தாா்.

இம்முகாமில் தலைமை பயிற்சியாளா்கள் சென்சை மில்லன் திரிவேதி தலைமை ஏற்று பல்வேறு பள்ளிகளிலிருந்து கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு பயிற்சி அளித்தாா்.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தலைமை பயிற்சியாளா் சென்சை செபாஸ்தியான், சென்சை வினோத் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT