விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மிலாது பெருவிழா

11th Nov 2019 12:27 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் மிலாது நபி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகமது நபியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பிலாலியா அரபிக் கல்லூரி மாணவா்கள் மற்றும் கூமாபட்டி முஸ்லிம் ஜமாத் இணைந்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஊா்வலம் நடத்தினா். இதில் ஏராளமான இஸ்லாமியா்கள், பள்ளிக் குழந்தைகள், சிறுவா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா். இந்த ஊா்வலம் பிலாலியா அரபிக் கல்லூரி, கூமாபட்டி கிளை துறைத் தலைவா் ஹபிபூா் ரஹ்மான் பிலாலி தலைமையில் நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT