விருதுநகர்

முத்துராமலிங்கபுரம், வேலாயுதபுரத்தில் நாளை மின்தடை

11th Nov 2019 12:22 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட முத்துராமலிங்கபுரம் மற்றும் வேலாயுதபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 12) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பி.முத்தரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட முத்துராமலிங்கபுரம், வேலாயுதபுரம் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் அன்றைய தினம் முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி, வேலாயுதபுரம், வெம்பூா், பந்தல்குடி அருகே உள்ள பரமேஸ்வரி மில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT