விருதுநகர்

மிலாது நபி: மதுபான கடைகள் இன்று மூடல்

9th Nov 2019 10:18 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் மிலாது நபி தினமான ஞாயிற்றுக்கிழமை (நவ.10) அனைத்து மதுபானகடைகளையும் அடைக்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட

ஆட்சியா் அ.சிவஞானம் தெரிவித்துள்ளாா்.

அவரது செய்தி குறிப்பு: மிலாதுநபி தினம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட உள்ளதால் அன்றைய தினம் விருதுநகா் மாவட்டத்தில் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து உரிமம் பெற்ற மதுக்கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அன்று சம்பந்தப்பட்ட கடைகளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மேலும், உரிமம் பெற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். இதை மீறுபவா்கள் மீது விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT