விருதுநகர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை: குற்றங்களை கண்டறிவதில் போலீஸாருக்கு சிக்கல்

விருதுநகர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்களை கண்டறிவதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்களை கண்டறிவதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
   விருதுநகர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இங்குள்ள ரயில்வே போலீஸார், முக்கிய நாள்களில் மட்டும் ரயில்களில் சோதனை நடத்துகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வில்லை.  இதனால் ரயில் நிலைய வாயிலில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் திருடு போய் விடுகின்றன. அதேபோல், ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளும் திருடப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தால், குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் போலீஸார் திண்டாடி வருகின்றனர். 
மேலும், விருதுநகர் ரயில் நிலையத்தின் கிழக்கு பகுதி திறந்த நிலையில் உள்ளதால், அவ்வழியே வந்து செல்வோர் குறித்த எவ்வித கண்காணிப்பும் இல்லை. 
விருதுநகர் ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதிகளான கணேஷ் நகர், வேலுச்சாமி நகர், என்ஜிஓ காலனி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் ரயில் மூலமே தப்பி விடுவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கின்றனர். 
 இதனால், திருடர்கள் மட்டுமின்றி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோரைக் கூட கண்டறிய முடியாத நிலை உள்ளது. எனவே, விருதுநகர் ரயில் நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com