விருதுநகர்

ஸ்ரீவிலி. பேருந்து நிலையத்தில் இடிந்து விழும் சுவர்: பயணிகள் அச்சம்

29th Jun 2019 08:23 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிப் பேருந்து நிலையத்தில் உள்ள கடையின் மேல் சுவர்  இடிந்து விழுந்து வருவதை செப்பனிட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
      இந்த பேருந்து நிலையத்தில் மேற்கு பகுதி கடைசியில் பயணிகள் நிற்கும் இடத்தினருகே உள்ள கடையின் மேல்புறச் சுவரின் சிமென்ட் பூச்சு இடிந்து விழுந்து வருகிறது. இது, கடையில் நிற்கும் பயணிகள் மீதும் அவ்வப்போது விழுந்து காயத்தை ஏற்படுத்துகிறது.     
     கடந்த 5 நாள்களாக இடிந்து விழும் இந்த சுவர் குறித்து நகராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
     எனவே, பெரும் விபத்து நிகழ்வதற்குள் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த சுவரை அப்புறப்படுத்திவிட்டு,  புதிய சுவர் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT