விருதுநகர்

விருதுநகர் அருகே  கார் மோதியதில் முதியவர் பலி

29th Jun 2019 08:23 AM

ADVERTISEMENT

விருதுநகர் அருகே கார் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
         விருதுநகர்- சாத்தூர் நான்கு வழிச் சாலையில் நடுவபட்டி அருகே காவி உடை அணிந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர்  நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (36) என்பவர் ஓட்டி வந்த கார், முதியவர் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
       இறந்த முதியவர், கோயில்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், நடுவபட்டியில் உள்ள சற்குருநாதர் கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்வதாகவும், விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வச்சகாரபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT