விருதுநகர்

இருளில் அருப்புக்கோட்டை பேருந்து நிலையம்: விபத்து, திருட்டு அதிகரிப்பு

31st Jul 2019 07:43 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தின் வடக்குப்பகுதி இருளடைந்து காணப்படுவதால் விபத்து மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தின் வடக்குப் பகுதியிலுள்ள  நடைமேடை மற்றும் பயணிகள் நிழற்குடை, பேருந்து உள்நுழையும் அலங்கார வளைவு ஆகிய பகுதிகளில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் இருளடைந்து காணப்படுகின்றன. 
இந்த இருள் சூழலைப்பயன்படுத்தி பெண்களிடம் சமூகவிரோதிகள் சிலர் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். மேலும் பெண்கள் கொண்டுவரும் பைகளில் உள்ள விலை உயர்ந்த பொருள்கள் மற்றும் பணப்பை ஆகியவற்றை நோட்டமிட்டுத் திருடும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 
அதுமட்டுமல்லாது  போதிய வெளிச்சமின்மையால் பேருந்துகள் உள்நுழையுமிடத்தில் திடீரென வரும் பேருந்துகளால் அப்பகுதியைக் கடக்க முயலும் இரு சக்கர வாகனஓட்டிகளும், ஆட்டோக்களும் நுழைவுவாயில் பகுதியிலேயே விபத்திற்கு ஆளாகின்றனர். எனவே இதுபோன்ற விபத்துக்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க அப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கவேண்டுமென நீண்ட காலமாக சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லையெனப் புகார் எழுந்துள்ளது. எனவே பேருந்து நிலையத்தின் மறுபகுதியான தெற்குப் பகுதியில் உள்ளதைப் போல வடக்குப்பகுதியிலும் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கவேண்டுமென பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT