விருதுநகர்

பயணியை தாக்கியதாக அரசுப் பேருந்து நடத்துனர்,  ஓட்டுநர் மீது வழக்கு

30th Jul 2019 08:56 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பயணியை தாக்கியதாக, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
      தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜாசிங் (49) இவர், ராஜபாளையத்தில் உள்ள தனது உறவினரை சந்தித்துவிட்டு, மீண்டும் ஊர் திரும்ப டி.பி.மில்ஸ் சாலை ரயில் நிலையம் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில்  காத்திருந்துள்ளார். 
     அப்போது, குமுளியிலிருந்து தென்காசி செல்லும் பேருந்தானது நிறுத்தத்தில் நிற்காமல் சென்றபோது, ராஜாசிங் பேருந்தை நிறுத்துமாறு சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கிவந்து, ராஜாசிங்கை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 
      இது குறித்து ராஜாசிங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, வடக்குக் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் முத்துக்குமரன், பேருந்து ஓட்டுநரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த செல்வம் (46) மற்றும் நடத்துனர் சேகர் (44) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT