சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் துறை சார்பில், இந்திய சமூக மற்றும் விஞ்ஞான வளர்ச்சிக் கழகம் நிதியுதவியுடன், சுற்றுச்சூழல் பொறுப்பு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, முதல்வர் சீ. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில், கேரள மாநில கோழிக்கோடு பல்கலைக்கழக வணிகவியல் துறைத் தலைவர் பி. விஜயசந்திரபிள்ளை பங்கேற்று பேசினார். முன்னதாக, கல்லூரித் தாளாளர் ஏ.பி. செல்வராஜன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கிவைத்தார். இதில், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் அருணாசலம், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரிப் பேராசிரியர் முருகையன் உள்பட பலர் பேசினர். முன்னதாக, ஒருங்கிணைப்பாளர் கிருத்திகா வரவேற்றார். துறைத் தலைவர் குருசாமி நன்றி கூறினார்.