விருதுநகர்

தென்பாலை-புலியூரான் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

29th Jul 2019 09:05 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள தென்பாலை-புலியூரான் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்பாலை கிராமத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது புலியூரான் கிராமம். இக்கிராமத்திலிருந்து அருப்புக்கோட்டை செல்ல புலியூரான், செம்பட்டி, ஆத்திப்பட்டியைக் கடந்து சென்றாக வேண்டும். 
இந்நிலையில் தென்பாலையிலிருந்து, புலியூரான் செல்லும் தார்ச்சாலை கற்கள் பெயர்ந்து அதிகளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு விட்டன. 
இதனால் இவ்வழியாகப் பயணிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
மேலும் இச்சாலை வழியாக  சைக்கிளில் புலியூரான் கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். 
எனவே  தென்பாலை-புலியூரான் இடையிலான சாலையைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT