ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் புதர்மண்டி கிடப்பதால் அதை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பேருந்து நிலையத்தில் இருந்து நகர் பேருந்து மற்றும் புறநகர் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. குறிப்பாக நெல்லை, மதுரை, நாகர்கோயில், தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு இரவு முழுவதும் பேருந்து வசதி உள்ளது. இதனால் இரவு நேரங்களிலும் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் புதர் மண்டி விஷ பூச்சிகள் நடமாடுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் புதிய பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.