விருதுநகர்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

27th Jul 2019 07:25 AM

ADVERTISEMENT

ராஜபாளையத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்- சத்திரப்பட்டி சாலையில் உள்ள ஜவஹர் மைதானம் அருகே, முன்னாள் எம்.பி. லிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தும் போது அங்கு விவசாயம்  முற்றிலும் பாதிப்படையும் என்பதால், அத்திட்டத்தை திரும்ப பெறக் கோரியும், விவசாயம் அதிகம் உள்ள டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெறக் கோரி பிரதமருக்கு ராஜபாளையத்தில் இருந்து ஆயிரம் கடிதங்களை அனுப்பும் நிகழ்ச்சியும்  தொடங்கியது. இன்று முதல் தொடர்ந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கை விட வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது  என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT