விருதுநகர்

கட்டங்குடியில் ஆழ்துளைக் கிணற்றில் மின்மோட்டார் பொருத்தக் கோரிக்கை

22nd Jul 2019 08:26 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை  அருகே ஆழ்துளைக் கிணற்றில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடி கிராமத்தில்  சிவானந்தா காலனி உள்ளது. இங்கு சுமார் 33 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளைக்கிணறு அமைத்து ஒரு அடிகுழாயும் அமைக்கப்பட்டது. 
ஆனால் இந்த அடிகுழாய் மூலம் அனைத்துக் குடும்பத்தினருக்கும் தேவையான நீரைப் பிடிக்க முடியவில்லை. இதனால் ஆண்களும், பெண்களும் தண்ணீருக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
அதனால் ஆழ்துளைக் கிணற்றில் மின்மோட்டார் பொருத்தி தொட்டியில் தண்ணீரை சேகரித்து வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT