ராஜபாளையம், ஆலங்குளம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடைபடும் என செயற்பொறியாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: பி.எஸ்.கே.நகர், அழகை நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி சாலை, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஐ.என்.டி.யூ.சி.நகர், பாரதிநகர், ஆர்.ஆர்.நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ். ராமலிங்காபுரம், கலங்காபேரி புதூர், மொட்டமலை, ஆலங்குளம், சங்கரமூர்த்திபட்டி, காளவாசல், கம்மாபட்டி, வலையபட்டி, மேலாண்மறைநாடு, கீழாண்மறைநாடு, ராமுதேவன்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, காக்கிவாடன்பட்டி, லட்சுமியாபுரம், கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி, செல்லம்பட்டி, கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், கொங்கன்குளம்
சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், சங்கம்பட்டி, எஸ்.திருவேங்கடபுரம், ராமசந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சம்தவிர்த்தான், வேப்பங்குளம், என்.புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சாம்பட்டி, குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன்பட்டி, அட்டைமில் முக்குரோடு ஆகிய பகுதிகள்.