விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகனை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
சாத்தூர் அருகே முத்தார்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி(65). இவருடைய மகன் பாலமுருகன்(39). இவர் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகனுக்கும், ராமசாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
இதையடுத்து வீட்டின் அருகே உள்ள கோயிலில் ராமசாமி இருந்துள்ளார். அப்போது அங்கு மதுபோதையில் சென்ற பாலமுருகனுக்கும், ராமசாமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திமடைந்த பாலமுருகன் அருகில் இருந்த கட்டையால் ராமசாமியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து இருக்கன்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.