விருதுநகர்

சீரடி சாய்பாபா கோயிலில் நாளை குருபூர்ணிமா விழா

15th Jul 2019 07:23 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை  சீரடி சாய்பாபா கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) குருபூர்ணிமா விழா நடைபெறுகிறது.
            இதுதொடர்பாக அருப்புக்கோட்டை  காந்தி நகர் சீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியான தகவல்: இக் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு அனுக்ஞை, எஜமானர் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி மகாலட்சுமி யாகம், சத்யநாராயண யாகம் மற்றும் பூர்ணாகுதி ஆகியன நடைபெறும். அதைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு குருபூர்ணிமா சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த சிறப்பு வழிபாட்டில் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெறும். 
ஆகவே, இந்த சிறப்பு குருபூர்ணிமா விழாவில், பசும்பால், மலர்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்களுடன் வந்து பக்தர்கள் வழிபட்டு சீரடி சாய் பாபாவின் அருள் பெற விழாக் குழுவினர் சார்பில் அன்புடன் அழைக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT