ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 6 ஆயிரம் 4 தவணைகளாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ராஜபாளையம் விவசாயிகள் தங்களை இணைத்துக் கொள்ள குடும்ப அட்டை நகல், நிலத்திற்கான பத்திர நகல், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல் போன்றவற்றை தங்களது செல்லிடப்பேசி எண்ணுடன் குறிப்பிட்டு தங்களது பகுதிகளுக்குள்பட்ட நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என வட்டாட்சியர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் கணினிமயாமாக்கப்பட்டுள்ளதால் பட்டா மாறுதல் விண்ணப்பித்த அன்றே பொதுமக்கள் பட்டா மாறுதலுக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.